2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

மோட்டார் சைக்கிள் வழங்கப்படாமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Thipaan   / 2015 ஏப்ரல் 22 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

தங்களுக்கு மானிய அடிப்படையில் வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள் வழங்கப்படாமையை கண்டித்தும் அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் மோட்டார் சைக்கிள் வழங்குமாறு கோரியும் கிராம சேவகர்கள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள், சம்மாந்துறை பிரதேச செயலகத்துக்கு முன்னால் இன்று (22) புதன்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2015 வரவு- செலவுத்திட்ட முன்மொழிவுக்கு அமைய அரச உத்தியோகத்தர்களுக்கு மானிய அடிப்படையில் வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள், அம்பாறை மாவட்ட கிராம உத்தியோகத்தார்கள் மற்றும் வெளிக்கள அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படவில்லை என்று கூறியே அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பாறை மாவட்டம் இதில் புறக்கணிக்கப்பட்டுள்ளது ஏன்?, அரசே பாரபட்சம் காட்டாதே, ஏன் எங்களுக்கு இந்த அணியாயம்? போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோபங்களை ஏந்திய வன்னம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X