2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அட்டாளைச்சேனை கோட்ட மட்டத்துக்கான தமிழ்த்தின போட்டி

Thipaan   / 2015 ஏப்ரல் 23 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.ஏ. தாஜகான்

அட்டாளைச்சேனை கோட்ட மட்டத்துக்கான தமிழ்த்தினபோட்டி அட்டாளைச்சேனை அந்நூர் வித்தியாலயத்தில் நேற்று புதன்கிழமை (22) இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி கஸ்ஸாலி; தலைமையில் இடம்பெற்ற தமிழ்த்தினப்போட்டியில் அட்டாளைச்சேனை கோட்டத்தில் காணப்படும் அனைத்துப் பாடசாலைகளும் பங்குபற்றின.

அரங்க நிகழ்ச்சிகளுக்கு பிரதம நடுவர்களாக ஆசுகவி அன்புடின், பாலமுனை பாருக், ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் இப்றாகீம், மற்றும் திருக்கோவில் வலயம், பொத்துவில் கோட்டத்தின் ஆசிரியர்கள், நடுவர்களாக கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி மேற்பார்வை ஒழுங்குகளை அக்கரைப்பற்று வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.ஐ ஹனிபா, ஆசிரிய ஆலோசகர் எம்.ஏ. சபுர்தீன் ஆகியோர் மேற்கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .