Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Thipaan / 2015 ஏப்ரல் 23 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட கணவரை இழந்த பெண்கள் வாழும் வாழும் எமது பிரதேசத்தில் கடந்த கால அரசினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் போதுமானதாகவில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரி.கலையரசன் குற்றம் சுமத்தினார்.
அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட சில திட்டங்கள் கூட கடந்த ஆட்சியாளர்களின் அரசியல் தலையீடுகள் காரணமாக பின்தள்ளப்பட்டமை பிரதேச அபிவிருத்திக்கு தடையாக அமைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில்; பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் நேற்றுமுன்தினம் (21) நடைபெற்ற ரூபா 12 இலட்சம் பெறுமதியான திவிநெகும வாழ்வாதார பொருட்களை கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
குறிப்பாக, கடந்தகால அரசியல் வரலாற்றிலே இவ்வாறான நிகழ்வுகளில் நாங்கள் கலந்து கொள்வது என்பது முடியாத காரியம்.
ஜனநாயகத்தை விரும்பிய இந்த நாட்டின் மக்களும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒத்துழைப்போடு நாட்டில் வாழும் அனைத்து கட்சிகளும் இணைந்து ஏற்படுத்திய நல்லாட்சி மாற்றத்தின் பிற்பாடே இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுகின்றது.
பிரதேச அபிவிருத்தி திட்டங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஆனால், அவ்வாறான திட்டங்கள் நிலையானதாக இருக்க வேண்டும்.
வாழ்வாதார திட்டங்களை நடைமுறைப்படுத்துவது மட்டும் அபிவிருத்தியல்ல. முறையற்ற வகையில் அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகள் அவர்களிடம் வழங்கப்பட்டதன் பிற்பாடு இணக்கப்பாட்டுடன் ஏற்படுகின்ற அபிவிருத்தியே உண்மையான அபிவிருத்தியாகும்.
அவ்வாறான மக்களின் பல நீண்டகால பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுடன் நிலையான மாற்றத்தினை அரசு ஏற்படுத்துமாயின் மாகாண சபையில் மட்டுமல்ல மத்தியிலும் அமைச்சுப் பொறுப்புக்களை பொறுப்பேற்பது தொடர்பில் ஆராய்ந்து, மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்ய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல முழு நாட்டிலும் நல்லாட்சியை ஏற்படுத்த அனைவரும் ஒற்றுமையுடன் செயற்படுவோம் எனவும் கூறிமுடித்தார்.
இந்நிகழ்வில் நீர்ப்பாசனதுறை பிரதி அமைச்சர் அனோமா கமகேயின் இணைப்பாளர் எம்.எம்.நிசாம், ஜக்கிய தேசிய கட்சியின் பிரதேச இணைப்பாளர் எம்.மோகன், திவிநெகும பிரதேச உத்தியோகத்தர் கே.நேசராஜா, முகாமைத்ததுவ பணிப்பாளர் எம்.பரமானந்தம், கிராம உத்தியோகத்தர்களின் நிருவாக உத்தியோகத்தர் கே.தர்மதாச உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான திவிநெகும வாழ்வாதார பொருட்களை வழங்கி வைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago