2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சிறார்களின் ஆக்கபூர்வ படைப்புகளை காட்சிப்படுத்தும் நிகழ்வு

Gavitha   / 2015 ஏப்ரல் 23 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் முன்பள்ளி பாலர் பாடசாலை சிறார்களின் ஆக்கபூர்வ படைப்புக்களை காட்சிப்படுத்தும் நிகழ்வு புதன்கிழமை (22) கனகாம்பிகை பாலர் பாடசாலையில் இடம்பெற்றது.

மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் தலைவி காந்திமதி ஜோய் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், வலயக் கல்விப்பணிபாளர் ஆர்.சுகிர்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டு காட்சிப்படுத்தும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

இந்நிகழ்வில் யுனிசெப் நிறுவனத்தின் பிரதிநிதியான விவேகானந்தா ராஜன், முன்பள்ளி உதவிக்கல்வி பணிப்பாளர் எஸ்.தர்மபாலன், பிரதேச செயலக முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் வை.உஜேந்தன், அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற அமைப்புகளின் உபதலைவர் வி.பரமசிங்கம் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் தங்களது குழந்தைகளின் ஆக்கபூர்வ படைப்புக்களை காட்சிப்படுத்தும் நோக்கில் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் ஆர்வதுடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .