2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வருடாந்த கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

Gavitha   / 2015 ஏப்ரல் 23 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

அட்டாளைச்சேனை பிரதேச செயலக மாதர் அபிவிருத்தி நிலையத்தின் வருடாந்த கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்  வியாழக்கிழமை (23) அட்டாளைச்சேனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஏ.ஏ.ஜாபீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கௌரவ அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர் டி.ஜே. அதிசயராஜ், அம்பாறை மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எச்.கலிலுர் ரஹ்மான், கணக்காளர் ஏ.எல்.எம்.நஜீமுதீன், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளர் வஹாப் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மகளிர் அபிவிருத்தி நிலையத்தில் தையல் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் அதிதிகளுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

இங்கு மாணவர்களினால் உற்பத்தி செய்யப்பட்ட பல வகையான உற்பத்திப் பொருட்களும் காட்சி வைக்கப்பட்டதுடன் அதிதிகள் மற்றும் மாணவர்களும் பொது மக்களும் அதனைப் பார்வையிட்னர்.

இந்நிகழ்வுக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் மகளிர் அபிவிருத்தி நிலைய தையல் போதனாசிரியை ஐனுல் மர்ழியா பதுறுதீன் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .