2025 ஜூலை 14, திங்கட்கிழமை

போசாக்கு உணவு பொதிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2015 ஏப்ரல் 24 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தீகவாபி மற்றம் ஆலங்குளம் ஆகிய பிரதேசதங்களிலுள்ள கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கான போசாக்கு உணவு பொதிகள் வழங்கி நிகழ்வு வியாழக்கிழமை (23) நடைபெற்றது.

சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் ஆலங்குளம் சுகாதார நிலையத்திலும் தீகவாபி வைத்தியசாலையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஏ.எல்.இஸ்ஸதீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, முட்டை, நெத்தலி கருவாடு, அரிசி, பயறு, சோயா, கடலை, போன்ற உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
இதன்போது, சுமார் 60 கர்ப்பிணிகள் மற்றும் பாலுட்டும் தாய்மார்களுக்கு 2 ஆயிரம் ரூபாய், பெறுமதியான உணவுப் பொதிகள் வழங்கப்பட்டதாக சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .