Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 ஏப்ரல் 24 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.ஏ.தாஜகான்
பாவனைக்குதவாத உணவு பொருட்களை விற்பனை செய்த குற்றத்துக்காக 10 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கல்முனைக்குட்பட்ட 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் நேற்று வியாழக்கிழமை திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனடிப்படையில் கல்முனைப் பிராந்திய பரிசோதனைக்குழு, பொத்துவில் சுகாதார வைத்திய பிரிவில் உள்ள உணவு கையாளும் நிலையங்களை பரிசோதனைக்குட்படுத்தியது.
இதன்போது, சுகாதார தன்மையுடன் உணவுகளை விற்பனை செய்யாத ஹோட்டல்கள், தேநீர் கடைகள், வெதுப்பகம் உட்பட 10 வர்த்தக நிலையங்கள் கண்டறியப்பட்டதுடன் இவற்றுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இச்சுற்றி வளைப்பில் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எம்.சமீம், மாவட்ட மேற்பார்வைப் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் பீ.பேரம்பலம், உணவு மருந்துப் பரிசோதகர் எஸ்.தஸ்தகீர், பொத்துவில் சுகாதாரப் பரிசோதகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
2 hours ago
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
9 hours ago