Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 ஏப்ரல் 24 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
பொத்துவில் குடாக்களி கரைவலை மீனவர்கிளின் நீண்டகால பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு வழங்கும் வகையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தலைமையிலான அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வியாழக்கிழமை (23) அங்கு விஜயமொன்றினை மேற்கொண்ருந்தனர்.
குடாக்களி கரைவலை மீனவர்கள் மிக நீண்டகாலமாக கடலுக்குச் செல்வதற்கான பாதைகள் மற்றும் அவர்களது மீன்பிடி உபகரணங்கள், பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கான இடவசதிகள், மலசல கூட வசதிகள், குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதிகள் இன்மையால் தாம் மேற்கொண்டு வந்த பாரியளவு பிரச்சினைகள் தொடர்பில் இதன் போது பிரஸ்தாபித்தனர்.
எட்டு கரைவலைகளைக்கொண்டு சுமார் 500 மீனவர்கள் இப்பிரதேசத்தில் கரைவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்களது குடும்பங்களின் ஜீவனோபாயமும் இதனைக் கொண்டே செல்வதாகவும் கூறுகின்றனர்.
இம்மீனவர்கள் சிலருக்கான காணிகளுக்கு அனுமதிப் பத்திரம் இருந்த போதிலும் கடற்கரையோரத்தில் வாடி வீடுகள் மற்றும் மலசலகூடங்கள் அமைப்பதற்கு கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் தடைவித்து வந்தனர்.
மேற்படி பிரச்சினைகள் தொடர்பில் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தார்.
இந்த நடவடிக்கையின் பயனாக மாகாண சபை உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் உரிய இடத்துக்கு விஜயம் மேற்கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளனர்.
பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஸாரத், கடல்வள பரிசோதகர் மனாசிர் சரிப், கரையோரப் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி சமீர பிரேரா மற்றும் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் ஏ.பதுர்காண், கிராம உத்தியோகஸ்தர் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago