2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

Sudharshini   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை புதிய வளத்தாப்பிட்டிக் கிராமத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை சம்மாந்துறைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவித்தனர்.

மல்வத்தை புதிய வளத்தாப்பிட்டிக் கிராமம், அணைக்கட்டு வீதியைச் சேர்ந்த செல்லத்துரை தேவகி (54) என்ற குடும்பப் பெண் வெள்ளிக்கிழமை (25) கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அப்பெண்; சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து, மேற்படி சம்பவத்துடன்  தொடர்புடையவர் என கருதப்பட்ட சந்தேக நபரை விஷமருந்திய நிலையில் பொலிஸார் கைதுசெய்ததாக தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபரை அம்பாறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .