2025 ஜூலை 14, திங்கட்கிழமை

விசேட தேவையுடைய மாணவர்களின் கலை மற்றும் கலாசார நிகழ்வுகள்

Sudharshini   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை மாவட்டத்திலுள்ள மூவின விசேட தேவையடைய மாணவர்களின் விளையாட்டு மற்றும் கலை, கலாசார நிகழ்வுகள் சனிக்கிழமை (25) அக்கரைப்பற்று அஸ்- ஸறாஜ் மகா வித்தியாலத்தில் நடைபெற்றது.
 
ஏனைய மாணவர்களைப் போன்று விசேட தேவையுடைய மாணவர்களினதும் இடைப்பாடவிதான செயற்பாடுகளையும் ஆக்கத்திறன் விருத்தியினையும் மேம்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
அம்பாறை மாவட்ட விசேட தேவையுடையோர் வலையமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
 
விசேட தேவையுடையோர் வலையமைப்பின் நிர்வாகத்துறை தலைவரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான எஸ்.எம்.எம்.உமர் மௌலானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் மேலதிகப் பணிப்பாளர் எஸ்.மனோகரன், உளநல வைத்திய அதிகாரி ஜே.எம். நௌபல் உட்பட பலர்; கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .