2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'வாக்குகளுக்காக தே.கா. இனவாதத்தை தூண்டியதில்லை'

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 27 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

தேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக இனவாத, பிரதேசவாத உணர்வுகளை தூண்டி ஒரு போதும் தேசிய காங்கிரஸ் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில்லை என தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, ஞாயிற்றுக்கிழமை (26) தெரிவித்தார்.

பொத்துவில், பாக்கியாவத்தை கிராமத்தில் நேற்று  நடைபெற்ற தேசிய காங்கிரஸின் கிளை புனரமைப்புக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் வாக்குகளைப் பெற்று அரசியல் அதிகாரத்தை பெறும் கட்சிகள், மக்கள் தொடர்பில் உயர்ந்த எண்ணம் கொண்டு நீடித்து நிலைத்திருக்கக் கூடிய நல்ல பல திட்டங்களை உருவாக்கி அத்திட்டத்தினூடாக மக்கள் நீண்ட காலம் நன்மை பெறக் கூடிய வகையில் பணி புரிய வேண்டும்.
 
தேர்தல் காலங்களில் மாத்திரம் வருகை தந்து இனவாத, பிரதேசவாத உணர்வுகளை கூறுகின்ற முஸ்லிம் காங்கிரஸூக்கு வாக்களித்து விட்டு, தேர்தல் முடிந்ததும் அந்தக் கட்சியைப் பற்றி விமர்சனம் செய்கின்ற நிலைமைக்கு நமது அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள்  பழக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த நிலைமையிலிருந்து அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் இப்போது படிப்படியாக மீண்டு வருகின்றமை  வரவேற்கத்தக்க விடயமாகும் எனத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் இணைப்பதிகாரியும் சட்டத்தரணியுமான எம்.எம்.பஹ்ஜி, தேசிய காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளர் யு.எல்.உவைஸ், பொத்துவில் பிரதேச தேசிய காங்கிரஸின் அமைப்பாளர் ஏ.பதுர்கான் மற்றும் கொள்கை பரப்புச் செயலாளர் எம்.எல்.ஏ.காதர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .