Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை மாவட்டத்தில் வெற்றிடமாகவுள்ள விவாக, பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள் உரிய பிறப்பு மற்றும் இறப்பு பதிவுப் பிரிவுக்குள் நிரந்தரமாக வசிப்பவராகவும் விவாகம் செய்தவராகவும் வயது 30க்கு குறையாததும் 60 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆண்,பெண் இருபாலாரும் விண்ணப்பிக்க முடியுமென பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் பதிவாளர் நாயகம் ஈ.எம்.குணசேகர அறிவித்துள்ளார்.
கல்வி மற்றும் ஏனைய தகமைகள் போன்ற மேலதிக விபரங்களை மாவட்ட செயலாளர் அலுவலகம், பிரதேச செயலாளர் அலுவலகம், கிராம அலுவலகர் அலுவலகம் போன்றவற்றில் வைக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலிலிருந்து தெரிந்து கொள்ளலமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று, பொத்துவில், கல்முனை, இறக்காமம், உஹன, அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களுக்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பப் படிவங்களை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் பெற்று எதிர்வரும் மே மாதம் 25ஆம் திகதக்கு முன்னர் மேலதிக பதிவாளர்நாயகம், மாவட்ட செயலாளர் அலுவலகம் அம்பாறை எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
13 minute ago
20 minute ago