Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
அம்பாறை திருக்கோவில் பிரதேச 22 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் நடைமுறையில் உள்ள கிராம மட்ட சிவில் பாதுகாப்பு விசேட பொது கூட்டம், செவ்வாய்க்கிழமை(28) திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் பிரதேச செலயக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் இடம்;பெற்றுவரும் குற்றச் செயல்கள் மற்றும் வீதிகளில் நடமாடும் கட்டாக்காலி மாடுகள், காட்டு யானைகள் தொடர்பான பிரச்சினைகள் போன்றன கலந்துரையாடப்பட்டதுடன் சில பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளும் உயர் அதிகாரிகளினால் காணப்பட்டன.
இந்நிகழ்வில் அதிதியாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.கே.டி.ஹேமந்த, திக்கோவிட்ட பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உதயன தென்னக்கோன் நிர்வாக உத்தியோகத்தர்(கிராம உத்தியோகத்தர்), சறோஜா தேவநாயகம் மற்றும் மதகுமார்கள் சுமார் 200க்கு மேற்பட்ட பொதுமக்களும் கலந்துகொண்டு திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெறும் குற்றச் செயல்கள் சம்மந்தமாக கலந்துரையாடியிருந்தனர்.
1 hours ago
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
9 hours ago