Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
ஹோட்டல்களில் உணவு பரிமாறும் கோப்பைகளுக்கு பயன்படுத்தப்படும் லன்ச்சீட்டை, வாயில் ஊதி கோப்பைகளின் போடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு லன்ச்சீட்டை வாயில் ஊதி கோப்பைகளின் போடுதவால், ஒருவருடைய கிருமி மற்றொருவருக்கு பரவுகின்றது என்று மாவட்ட மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் பி.பேரம்பலம் தெரிவித்தார்.
உணவை கையாள்வது தொடர்பில், ஆலையடிவேம்பு பிரதேச சபை கேட்போர் கூடத்தில் உணவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணிபுரிகின்றவர்களை அறிவுறுத்தும் செயலமர்வு செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டாவாறு தெரிவித்தார்.
ஹோட்டல்களினுள் புகைபிடிக்கும் உரிமையாளருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்வதுடன் ரூபாய் 10 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டிய நிலை உருவாகும். அத்தோடு உணவுச் சட்டத்தை மீறுபவர்களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
உணவுகளை பொதி செய்வதற்காக அச்சடிக்கப்பட்ட காகிதாதிகள் பயன்படுத்துவதும் உடன் நிறுத்தப்படவேண்டும். ஏனெனில் அச்சடிக்கப்பட்ட காகிதாதிகளில் ஈயம் சேர்க்கப்பட்டுள்ளது. இக்காகிதாதிகளினால் உணவுப்பதார்தங்களை பொதி செய்யும் போது, ஈயமானது உணவுப்பதார்தங்களில் உட்செல்வதாகவும் அவர் விளக்கினார்.
பிரதேச சபை அனுசரணையுடன் பிரதேச சபை தவிசாளர் கே.இரத்தினவேல் தலைமையில் ஆலையடிவேம்பு சுகாதார பணிமனையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்செயலர்வில், ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.முனவ்பர், உணவு மருந்து பரிசோதகர் எஸ்.தஸ்தகிர், பொதுச்சுகதார பரிசோதகர் ப.கேதீஸ்வரன், எம்.மனோரஞ்சிதம், பெ.மகேஸ்வரன் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சமூகமளித்திருந்தனர்.
ஏப்ரல் 06ஆம் திகதி முதல் மே 08ஆம் திகதி வரை உலக சுகாதார நிறுவனத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள உணவுப்பாதுகாப்பு மாதத்தையொட்டி, கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் பிரிவுகளில் உணவை கையாளும் முறைகளும் பரிசோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
1 hours ago
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
9 hours ago