Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித், எம்.எஸ்.எம். ஹனீபா
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றத்தை வலியுறுத்தி இன்று புதன்கிழமை(29) அப்பிரதேசம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
சாய்ந்தமருது அனைத்து பொது அமைப்புகள் சம்மேளனம் எனும் பெயரில் நான்கு வகையான சுவரொட்டிகள் அப்பிரதேசத்தின் அனைத்து வீதிகள் மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
தனி உள்ளூராட்சி மன்றம் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன் இல்லையேல் தேர்தலை பகிஷ்கரிப்போம்!, அரசே தனி உள்ளூராட்சி சபையை உடன் வழங்கு!, இனியும் பொறுமை காக்க தயாரில்லை!
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் தனி உள்ளூராட்சிமன்றம் பெற்றுத் தருவோருக்கு 18,000 வாக்குகள் சன்மானம்!
தலைமையை உறுதிப்படுத்திய மண்ணுக்கு வழங்கும் சன்மானம் என்ன?
தன்மானமுள்ள சாய்ந்தமருது மக்களே ஒன்றுபடுவோம்! உள்ளூராட்சியை வென்றெடுப்போம்! போன்ற கோஷங்கள் அந்த சுவரொட்டிகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை ஏற்படுத்தப்படும் எனவும் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் பொது நிர்வாக, உள்ளூராட்சி அமைச்சர் கரு ஜெயசூரிய கடந்த வாரம் உறுதியளித்திருக்கின்ற நிலையிலேயே இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன.
இது குறித்து சாய்ந்தமருது அனைத்து பொது அமைப்புகள் சம்மேளன முக்கியஸ்தர் ஒருவருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது இவ்வுத்தரவாதத்தை கூடிய விரைவில் நிறைவேற்றும் வகையில் அழுத்தம் கொடுக்கும் நோக்கிலேயே சம்மேளனம் இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
9 hours ago