2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

முதலைகளால் மக்கள் அச்சத்தில்

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, ஒலுவில் களியோடை ஆற்றிலும் அதனை அண்டியுள்ள பகுதிகளிளும் முதலைகளின் நடமாற்றம் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

களியோடை ஆறு இங்குள்ள நெற்செய்கைக் காணிகளுக்கு நீர் வழங்கும் மார்க்கமாகவும் நீர் வெளியேற்றும் மார்க்கமாகவும் காணப்படுகினறது.

முதலைகள் ஆற்றை விட்டு வெளியேறி ஆற்றின் மருங்குகளிலும் வயல் வரம்புகளிலும் திரிகின்றன.
இப்பகுதியில் அண்மைக்காலமாக முதலைக் கடிக்கு பலர் ஆளாகியுள்ளமையால் பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

எனவே, முதலைகள் அதிகமாக உள்ளது என்பதை வெளிப்படுத்துகின்ற எச்சரிக்கை பாதாதைகள், சமிஞ்சைகளை மக்களின் பார்வைக்காக வைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .