2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

விசேட தேவையுடையவர்களுக்கான உபகரணங்கள் வழங்கி வைப்பு

Sudharshini   / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனிபா

கிழக்கு மாகாண சமூகசேவை திணைக்களத்தினால் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விசேட தேவையுடையோருக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு  புதன்கிழமை (29) அட்டாளைச்சேனை சமூக பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தர் எம்.ஐ. அன்வர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனிபா, உதவிப் பிரசே செயலாளர் ரி.ஜே. அதியராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முச்சக்கரவண்டி, சக்கர நாற்காலி, ஊன்றுகோல், கைதாங்கி போன்ற உபகரணங்கள் அட்;டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 07  விசேட தேவையுள்ளவர்களுக்கு வழக்கி வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X