2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் பணிகள் மகத்தானவை: நஸீர்

Gavitha   / 2015 ஏப்ரல் 29 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் பணிகள் மகத்தானவை. ஆசிரியர் சமுதாயம் சமூகத்தில் என்றும் மதிக்கப்பட வேண்டியவர்கள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை இக்ரஹ் வித்தியாலயத்தில் கடந்த வருடம் திறமை காட்டிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி பரிசளிக்கும் வைபவம் அதிபர் திருமதி எம்.எம்.அஸ்ஹர் தலைமையில் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை கூட்ட மண்டபத்தில் நடைபெற்ற போது, அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் இங்கு உரையாற்றுகையில்,

ஒரு நாட்டின் தலைவராக வருபவரும் அதே போன்று ஏனைய தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ளோரும் தமது கல்வி அறிவை ஆசிரியர்களிடமிருந்தே பெற்று வந்தவர்களாவர். சமூகத்தையும் மாணவர் பரம்பரையினரையும் சீராக வழிநடத்தி செல்வதில் ஆசிரியர்களும்  அதிபர்களும் செய்து வரும் பணிகள் மகாத்தானவை. இதனால் தான்  அவர்களின் பணி சிறக்கவும் கௌரவம் பாதுகாக்கப்படவும்  பாடசாலைகளில் நடைபெறுகின்ற வைபவங்களில் இவர்கள் பாராட்டப்படுவது விசேட அம்சமாகும்.

இக்ரஃ வித்தியாலயத்தில் உள்ள ஆசிரியர்கள் சிறந்த முறையில் பணியாற்றுகின்றார்கள். இதன் விளைவாக பாடவிதானம் இணைப்பாட விதான செயற்பாடுகளில் மாணவர்களின் அடைவு மட்டம் அதிகரித்து இருப்பதை இவ்விடத்தில் காணக் கூடியதாகவுள்ளன. இவைகளை முகாமை செய்து வழிப்படுத்தி செயற்படுத்துகின்ற அதிபரை இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன்.

இப்பாடசாலையின் வளர்ச்சியிலும் அபிவிருத்தியிலும் பெரும் பங்காற்றிவரும் பாடசாலை அபிவிருத்திக் குழுவினர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்களையும் இச்சந்தர்ப்பத்தில் அவர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றேன் என்று தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .