2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'20ஆவது திருத்தச்சட்டமூலம் சிறுபான்மையினரை பாதிக்கக்கூடும்'

Gavitha   / 2015 ஏப்ரல் 29 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

19ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அடுத்து வரப்போகும் 20ஆவது சட்டமூலம் சிறுபான்மை மக்களுக்கு பாதகத்தை ஏற்படுத்துகின்ற திருத்தச்சட்டமாக அமையக்கூடும் என்று கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

வாழைச்சேனை வை.எம்.சி.ஏ.கட்டடத்தில் முஸ்லீம், தமிழ் மக்களின் தேவைகள் தொடர்பாக செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

20ஆவது திருத்தச்சட்டத்தை எவ்வாறு முகம் கொடுப்பது என்று யோசித்து வருகின்றோம். 20ஆவது திருத்தச்சட்டத்திலே இலங்கையில் பரந்து வாழ்கின்ற முஸ்லீம்கள் ஒட்டு மொத்தமாக பாதிப்படைக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றது.

அதேபோல் வட கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற தமிழ் மக்கள் அவர்களுடைய நாடாளுமன்ற  பிரதிநிதித்துவங்களை இழக்கின்ற வாய்ப்புக்கள் இருக்கின்றது. அதே போல் மலையகத்தில் உள்ள தமிழ் மக்களுடைய பிரதிநிதித்துவங்களும் கேள்விக்குறியாகிவிடும் வாய்ப்புக்கள் உள்ளது.

உடனடியாக நாடாளுமன்றம் கலைக்கப்படுமாக இருந்தால், இந்த அரசியல் திருத்தச்சட்டம் வராமல் போகலாம். நாடாளுமன்றம்  கலைக்கப்படாமல் பிற்போடப்படுமாக இருந்தால், அரசியல் கட்சிகள் 20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக பேசுகின்ற காலமாகத்தான் எதிர்காலம் அமையும் என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .