2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

மதுபானசாலைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 30 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த காரைதீவு பிரதான வீதியில் இயங்கிவரும் மதுபானசாலையை அகற்றுமாறும் மதுபானசாலை அனுமதி வழங்குவதை நிறுத்துமாறும் கோரி புதன்கிழமை (29) மாபெரும் சாத்வீகப் போராட்டம் நடைபெற்றது.

காரைதீவு இந்து சமய விருத்திச்சங்கம் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த சாத்வீகப் போராட்டத்தை நடத்தின.

காரைதீவைச் சேர்ந்த 117 சமய, சமூக நிறுவனங்களின் சார்புடனும் பங்குபற்றுதலுடனும் காரைதீவு பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் பெருந்தொகையான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

அத்துடன், இந்த சாத்வீகப் போராட்டத்தில் காரைதீவைச் சேர்ந்த கல்விமான்கள் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்கள் பலர் இணைந்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X