Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 30 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.சி. அன்சார்
சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை மற்றும் சம்மாந்துறை மக்களின் வேண்டுகோளுக்கு அமைய சம்மாந்துறை பிரதேச சபையை, நகர சபையாக தரமுயர்த்துவது சம்பந்தமான உத்தேச அறிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறைத் தொகுதியின் பிரதம அமைப்பாளர் எம்.ஏ. ஹஸன் அலி, பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் புத்தசாசன அமைச்சர் கரு ஜயசூரியவை அமைச்சில் புதன்கிழமை (29) சந்தித்து கையளித்தார்.
இச்சந்திப்பில் சம்மாந்துறை பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்தப்பட வேண்டிய அவசியம் பற்றிய விடயங்களை அமைப்பாளர் ஹஸன் அலி, அமைச்சர் கரு ஜயசூரியவிடம் மகஜரை கையளித்து விரிவாக விளக்கிக்கூறினார்.
சம்மாந்துறை பிரதேச சபையாது, 133 சதுரகிலோ மீற்றர் பரப்பளவையும் 51 கிராம அலுவலர்கள் பிரிவுகளையும் சுமார் 85 ஆயிரம் மக்கள் தொகையையும் 42 ஆயிரம் வாக்காளர்களையும் கொண்ட பிரதேசமாகும்.
1947ஆம் ஆண்டு சம்மாந்துறைப்பட்டின சபையாகவும் 1960ஆம் ஆண்டு கிராம சபையாகவும் 1988ஆம் ஆண்டு முதல் பிரதேச சபையாக இயங்கி வருகின்றது.
இச்சபையை நகர சபையாக தரமுயர்த்துவது சம்பந்தமாக முன்னாள் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சரிடம் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, பொதுநல அமைப்புக்கள் மற்றும் மக்கள் கோரிக்கை விடுத்தும் செய்துதருவதாக வாக்குறுதியளித்தும் நிறைவேற்றவில்லை எனவும் இக்கோரிக்கையின் நியாயங்களை அமைச்சர் கரு ஜயசூரியவிடம் அமைப்பாளர் விளக்கிக்கூறினார்.
குறித்த மகஜரை ஏற்றுக்கொண்ட அமைச்சர் கரு ஜயசூரிய, சம்மாந்துறை பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்துவது சம்பந்தமாக பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்து அதற்கான ஆவணத்தில் கையொழுத்திட்டு அமைச்சின் செயலாளரிடம் கையளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago