Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Kanagaraj / 2015 மே 01 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைஷல் இஸ்மாயில்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கர வண்டிச் சாரதி சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.
அட்டாளைச்சேனை தைக்காநகர் பி.எம்.சிற்கு அருகாமையில் இந்த வாகன விபத்து இடம்பெற்றது.
அக்கரைப்பற்றிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியின் மீது வீதியின் அருகில் நின்றுகொண்டிருந்த கட்டாக்காளி மாடு பாய்ந்ததாலே இந்த வாகன விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சிறு காயங்களுக்குள்ளான முச்சக்கர வண்டிச் சாரதி வாகனத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததனால் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
இவ்விபத்தினால் முச்சக்கர வண்டி பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது.
பொத்துவில், அக்கரைப்பற்று, ஆலயடிவேம்பு, அட்டாளைச்சேனை, நிந்தவூர், கல்முனை, சம்மாந்துறை போன்ற பிரதேச சபையின் கீழுள்ள பகுதிகளில் பிரதான வீதியில் கட்டாக்காளிகளால் வாகன சாரதிகளுக்கு பாரிய அசௌகரியங்களை விளைவித்து வருவதுடன், இந்த கட்டாக்காளிகளினாலேயே வாகன விபத்துக்கள் இடம்பெற்றும் வருகின்றது என வாகன சாரதிகளும், பொதுமக்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.
இந்த கட்டாக்காளிகள் தொடர்பில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற அமைச்சர்கள், உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் குறிப்பிட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் பிரதேச செயலக செயலாளர்கள் அணைவரும் கவனம் செலுத்தவேண்டும் என வாகன சாரதிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இவ்வாறு பல தடவைகள் பல விபத்துச் சம்பவங்களை குறிப்பிட்டு குறித்த நபர்களுக்கு தெரிவித்தும் எவ்வித பலனும் இதுவரை காலமும் கிடைக்கவில்லை எனவும் வாகன சாரதிகளும், பொதுமக்களும் மேலும் கவலையுடன் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago
3 hours ago