Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Kanagaraj / 2015 மே 01 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
அக்கரைப்பற்று பிரதேசத்தில் நீண்ட காலமாக மோட்டார் சைக்கிள் திருடிவந்த அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த 7 பேர் கொண்ட கொள்ளையர் குழவொன்றை நேற்று பிற்பகல் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து திருடப்பட்ட 5 மோட்டார்சைக்கிள்கள், சொட்கன், துப்பாக்கி ஒன்று உள்ளூரில் தயாரித்த துப்பாக்கி குழல், கோடரி, 3 அடி நீளம் கொண்ட வாள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
அம்பாறை விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து அக்கரைப்பற்று பெரும் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு புலனாய்வுத்துறை பொலிஸ் அதிகாரி சப் இன்ஸ்பெட்டர் வை.விஜயராஜ் தலைமையிலான் பொலிஸ் குழவினர் தமண பொலிஸ் பிரிவிலுள்ள வாங்காமம் பிரதேசத்தில் கொள்ளை கும்பலின் பிரதான சூத்திரதாரி தலைமறைவாகி இருந்துவந்த வீட்டினை திங்கட்கிழமை(20) இரவு சுற்றிவளைத்தனர்.
பிரதான சூத்திரதாரி தப்பியோடியபோதும் கொள்ளைக்கும்பலைச் சேர்ந்த அக்கரைப்பற்று முதலாம் பிரிவு டீன்ஸ் வீதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்ததுடன் அங்கிருந்து சொட்கண் துப்பாக்கி மற்றும் உள்ளுர்துப்பாக்கி குழல,; கோடரி, வாள் மோட்டார்சைக்கிள் என்பன மீட்கப்பட்டது
இதனையடுத்து கைது செய்யப்பட்டவரிடம் மேற் கொண்ட விசாரணையையடுத்து கொள்ளைக்கும்பலைச் சேர்ந்த 4 பேரை கைது செய்ததுடன் கொள்ளையிடப்பட்ட மோட்டார்சைக்கிள்களும் மீட்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்டவர்களை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் எச்.எம்.எம்.பஸீல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவர்களை எதிர்வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அக்கரைப்பற்று பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதரிகாரி கே.எம். இப்பிஹாகம் கிஜடைத்த இரகசிய தகவலையடுத்து தப்பி ஓடிய கொள்ளைக் கும்பலின் பிரதான சூத்திரதாரி பொத்துவிலில் தலைமறைவாகியிருந்தநிலையில் அங்கிருந்து அம்பாறை நோக்கி பஸ்வண்டியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் பிரயாணித்தபோது திருக்கோவில் பிரதேசத்தில் வைத்து குறித்த பஸ்வண்டியை நிறுத்தி பிரதான சூத்திரதாரியை கைது செய்ததுடன் அவரிடம் மேற்கொண்ட விசாரணையைடுத்து கொள்ளைக்கும்பலைச் சேர்ந்த மேலும் இருவரை கைது செய்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago