2025 ஜூலை 12, சனிக்கிழமை

இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் வேலைத்திட்டம்

Princiya Dixci   / 2015 மே 01 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

நாடளாவிய ரீதியில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் மற்றும் இளைஞர் கழகங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை மக்களுக்கு அறிவுறுத்தும் வேலைத்திட்டம், நாளை சனிக்கிழமை (02) நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளன.

இதற்கமைவாக அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பதிவுசெய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணம் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு, நாளை (02) மாலை 3.30 மணியளவில் அம்பாறை மாவட்டத்தில்   04 இடங்களில் இடம்பெறவுள்ளதாக அம்பாறை மாவட்ட இளைஞர் கழகங்களின் உப தலைவர் யூ.எல்.எம்.சபீர் தெரிவித்தார்.

அம்பாறை, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை மற்றும் கல்முனை ஆகிய இடங்களில் இந்நிகழ்வுகளை நடத்த சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அட்டாளைச்சேனையில் இடம்பெறும் இந்நிகழ்வு அம்பாறை மாவட்ட இளைஞர் அதிகாரி யூ.எல்.அப்துல் மஜீட் தலைமையில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்துகொள்ளவுள்ளார்.

கௌரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில் மற்றும் லாகுகல ஆகிய பிரதேச செயலகங்களில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்கள் பங்குபற்றும் நிகழ்வு, அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட இளைஞர் கழகங்களின் உப தலைவர் யூ.எல்.எம்.சபீர் மேலும் தெரிவித்தார்.

அன்றைய நிகழ்வில் கலந்துகொள்ளும் 06 பிரதேச செயலகங்களின் வீரர்களுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் நடத்தி வைக்கப்பட்டு, இறுதிச் சுற்றும் அன்றைய தினமே இடம்பெற்று, சம்பியன் கிண்னம் பிரதம அதிதியினால் வழங்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .