Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 மே 02 , மு.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
அம்பாறை, பனங்காடு பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் உண்டியல் உடைத்து சுமார் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை (30) இரவு இடம்பெற்றதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பனங்காடு பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்துக்;கு நேற்று வெள்ளிக்கிழமை (01) காலையில் சென்றபோது இரும்பிலான உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த சுமார் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக, ஆலயத் தலைவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதேவேளை, வருடாவருடம் இடம்பெறும் ஆலய வருடாந்த உற்சவ காலத்தில் உண்டியலை திறந்து பணம் எடுப்பதாகவும்; கடந்த வருடம் இடம்பெற்ற வருடாந்த உற்சவத்தின் போது இவ் உண்டியலை திறந்து பணம் எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ள வருடாந்த உற்சவதினத்தில் இந்த உண்டியலை திறப்பதாக இருந்த நிலையில் இவ்வாறானதொரு செயல் இடம்பெற்றுள்ளதாக ஆலயத் தலைவர் தெரிவித்தார்.
இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
1 hours ago
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
9 hours ago