Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Thipaan / 2015 மே 02 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.அறூஸ். ரீ.கே.றஹ்மத்துல்லா
சாய்ந்தமருது தோணா 3 கோடி ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக நகர அபிலிருத்தி, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை (01) சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்; தலைமையில் இடம்பெற்றது.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், காணி மீட்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம்.எச்.எம்.சல்மான், அதன் செயற்பாட்டுப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா உள்ளிட்ட உயர் அதிகாரிகள், புத்திஜீவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ்வேலைத்திட்டத்தின் முதற்கட்ட அபிவிருத்தி வேலைகள் எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
52 minute ago
1 hours ago