2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

தீ விபத்தில் சேதமடைந்த கடைகளை புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்பு

Sudharshini   / 2015 ஏப்ரல் 30 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்,எம்.எஸ்.எம். ஹனீபா

கல்முனை பொதுச் சந்தையில்  தீ விபத்து காரணமாக எரிந்து சேதமடைந்த கடைகளை உடனடியாக புனரமைப்பு செய்வதுக்கு நடவடிக்கை எடுக்குமாறு, மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்முனை பொதுச் சந்தைக் கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சேதமடைந்த கடைகளை இன்று வியாழக்கிழமை (30) அவர் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து அங்கு பொதுச் சந்தை வர்த்தகர்கள் மற்றும் மாநகர சபை  அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே, அதிகாரிகளுக்கு புனரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு பணிப்புரை வழங்கினார்.

அதேவேளை, எதிர்காலங்களில் சந்தைக் கட்டடத் தொகுதியில் மின்னிணைப்புகளை வழங்கும் போது, உரிய விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X