2025 ஜூலை 10, வியாழக்கிழமை

தையல் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

Sudharshini   / 2015 மே 03 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே. றஹ்மத்துல்லா எம்.எஸ்.எம். ஹனீபா, ஐ.ஏ.ஸிறாஜ்,எஸ்.எம்.அறூஸ் 

கைத்தொழில் மற்றும் வர்த்தக வாணிபத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை புடவைகள் மற்றும் ஆடை நிறுவனத்தின் தையல் பயிற்சி நிலையம் சனிக்கிழமை (02) பாலமுனையில் திறந்து வைக்கப்பட்டது.

பாலமுனை பிரதேசத்தில் படித்து விட்டு வேலைவாய்ப்பின்றி இருக்கும் யுவதிகளின் வாழ்க்கையை பொருளாதார ரீதியில் உயர்த்தும் நோக்கில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாலமுனை மத்திய குழு மேற்கொண்ட முயற்சியின் பயனாக இப்பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பாலமுனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மத்திய குழவின் அமைப்பாளரும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தயோகத்தருமான பி.எம்.ஹீஸையிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபையிர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட், கல்முனை மாநகர சபை உறுப்பினர் சி.எம்.முபீத் மற்றும் அமைச்சின் அதிகாரிகள், கட்சியின் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .