Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Gavitha / 2015 மே 06 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
பாடசாலையில் மாணவர்கள் கல்வி கற்கும் காலங்களில் சமூதாயத்துக்கு சிறந்த நல்ல பணிகளை செய்வதன் மூலம் எதிர்காலத்தில் சிறந்த பிரஜையாக வர முடியும் என்று அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.எம். அஸ்ஹர் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் சென் ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி பயிற்சியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் சின்னம் சூட்டும் வைபவம் புதன்கிழமை (06) நடைபெற்றது. இதில் அதிதியாக கலந்நு கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அறபா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எல்.எம். பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.எம். அஸ்ஹர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இங்கு முதலுதவி பயிற்சியை பெற்றுள்ள மாணவர்கள், வெறுமனே இருந்து விடாமல் சமூதாயத்துக்கு தேவை ஏற்படும் போது பயனுள்ள சேவையை வழங்க வேண்டும்.
இன்று உலகில் நாளாந்தம் பாரிய இயற்கை அனர்த்தங்கள் நடந்தவண்ணம் உள்ளன. இதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்கு முதலுதவி பயிற்சியை முடித்த மாணவர்கள் முன்வரவேண்டும். அப்போதுதான் இதன் நோக்கத்தை நிறைவு செய்தவர்களாக மாறமுடியும்.
நாகரீகம் முன்னேறி வருகின்ற இக்கால கட்டத்தில் உதவி செய்யக்கூடிய மனநிலை மக்களிடத்தில் அரிதாக காணப்படுகின்றது. அந்த வகையில் இப்பாடசாலையில் இவ்வாறான பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கி சமூகத்துக்கு உதவி செய்யக்கூடிய மனப்பாங்கினை ஏற்படுத்தி கொடுத்துள்ள அதிபரை இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன்.
முதலுதவி பயிற்சியை முடித்துள்ள மாணவரகள் ஏனைய மாணவர்களுக்கு முன்மாதிரியாகவும் ஒழுக்க சீலர்களாகவும் உயர்ந்த பண்புள்ளவர்களாகவும் காணப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை என்றார்.
இவ்வைபவத்தில் சென் ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி மாவட்ட ஆணையாளர் எம்.எச்.எம். மன்சூர் உட்பட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
முதலுதவி பயிற்சியை பூர்த்தி செய்த 51 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
54 minute ago
1 hours ago