2025 ஜூலை 03, வியாழக்கிழமை

'இந்த அரசாங்கத்தை கொண்டுவருவதில் சிறுபான்மையினரின் பங்கு காத்திரமானது'

Suganthini Ratnam   / 2015 மே 31 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

'இந்த அரசாங்கத்தை கொண்டுவருவதில் சிறுபான்மையினரின் பங்கு மிகவும் காத்திரமானது. அந்த வகையில், நாம் பங்காளிகளாக இருந்து   எமது மக்களுக்கான பணிகளையும் தேவைகளையும் செய்வோம்' இவ்வாறு சமூர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.

வீட்டுத்திட்டம் மற்றும் வாழ்வாதார அபிவிருத்திகளுக்கான  காசோலைகள் வழங்கும் நிகழ்வு, அம்பாறையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.  இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இந்த நாட்டின் ஏழைகளுக்கு பொருத்தமான ஒருவர் சமூர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கிடைத்துள்ளமை  இந்த நாட்டு மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும்' என்றார்.

'அமைச்சர் சஜித்  பிரேமதாஸ அவரது தந்தையின் வழியில் எமது நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் வழிகாட்டுதலுடனும் மிகவும் சிறப்பாக பணியாற்றி வருகின்றார்' எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .