2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

திவிநெகும வலய உதவி முகாமையாளர் ஒன்றியத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

Gavitha   / 2015 மே 31 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

அம்பாறை மாவட்ட  திவிநெகும வலய உதவி முகாமையாளர் ஒன்றியத்தின் அங்குரார்ப்பண  நிகழ்வு சனிக்கிழமை  (30) சாய்ந்தமருது திவிநெகும வலய, வங்கி அலுவலக மண்டபத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது திவிநெகும வலய உதவி முகாமையாளர் எம்.எம்.எம்.முபாரக்கின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற  இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தில்  திவிநெகும வலய உதவி முகாமையாளர் ஒன்றியம் ஆரம்பிக்கப்பட வேண்டிய  அவசியம் தொடர்பாக கருத்துரைகள் கூறப்பட்டதுடன்,  திவிநெகும வலய உதவி முகாமையாளர்களின்  தற்போதைய நிலைப்பாடு, ஒன்றியதின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

44 அங்கத்தவர்களைக் கொண்ட  இந்த அமைப்பின் அடுத்த கூட்டம்  எதிர்வரும் ஜூன் 13ஆம் திகதி அட்டளைச்சேனையில் இடம்பெறவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X