2025 ஜூலை 02, புதன்கிழமை

விபத்தில் குடும்பஸ்தர் பலி

Thipaan   / 2015 ஜூன் 02 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அம்பாறை, சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவலிலுள்ள வளத்தாப்பிட்டிப் பகுதியில் திங்கட்கிழமை(01) நள்ளிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் உயிரிழந்ததாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை – அம்பாறை வீதி வளத்தாப்பிட்டிப் பிரதேசத்தில் இவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதி மருங்கிலிருந்த பாறாங்கல்லுடன் மோதியுள்ளது. மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளது.

மரணமடைந்தவர் வளத்தாப்பிட்டிக் கிராமத்தைச் சேர்ந்த எஸ். ரவீந்திரன் (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து சம்மாந்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .