2025 ஜூலை 02, புதன்கிழமை

உழவு இயந்திரம் கவிழ்ந்து 21 பேர் காயம்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 02 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, வி.சுகிர்தகுமார்,எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, பொத்துவில் பிரதான வீதிச் சுற்றுவட்டத்தில்   செவ்வாய்க்கிழமை  (02) உழவு இயந்திரப்பெட்டி கவிழ்ந்ததால்,  21 பேர் காயமடைந்துள்ளதாக பொத்துவில்  வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த 21 பேரும்  உடனடியாக பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.  இவர்களில் நான்கு பேர் மேலதிக சிகிச்சைக்காக  அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏனைய 16 பேர் பொத்துவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு வீடு திரும்பியுள்ளனர். சிறுவனொருவன் பொத்துவில் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றான் என்று அவ்வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொசன் விடுமுறையை கழிப்பதற்காக மொனறாகலை, சியம்பலாண்டுவ பிரதேசத்திலிருந்து பொத்துவில், அறுகம்பைக்கு  உழவு இயந்திரத்தில் வந்தவர்களே விபத்துக்குள்ளானார்கள்.

பொத்துவிலிலிருந்து அக்கரைப்பற்று மற்றும் சியம்லாண்டுவ ஆகிய வீதிகளுக்கான சுற்றுவட்டத்திலுள்ள வளைவில்; வேகமாக வந்துகொண்டிருந்த உழவு இயந்திரம் திரும்பியபோதே உழவு இயந்திரப்பெட்டி கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பில் பொத்துவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .