2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

தேசிய மீலாத் தினப் போட்டிகள்

Princiya Dixci   / 2015 ஜூன் 03 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

தேசிய மீலாத் தினத்தையொட்டி நடத்தப்படும் மாணவர்களுக்கான கோட்ட மட்டப் போட்டிகள், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏறாவூர்க் கோட்டத்தில் செவ்வாய்க்கிழமை (02) இடம்பெற்றது.

ஏறாவூர்க் கோட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது ஆக்கத் திறன் செயற்பாடுகளை நடுவர்கள் மத்தியில் வெளிப்படுத்தினார்கள்.

ஏற்கெனவே குறித்தொதுக்கப்பட்ட தலைப்புக்களில் மாணவர்கள் தங்களது ஆக்கத் திறன் வெளிப்பாடுகளை நிகழ்த்தியதுடன் திறமை அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். குழு மற்றும் தனி நிகழ்வுகளாக ஆக்கத் திறன் போட்டிகள் இடம்பெற்றன.

கலாசாரப் போட்டிகள், பேச்சு, அல்குர்ஆன் ஓதல், கிறாஅத் மற்றும் கஸீதா உட்பட இன்னும் பல நிகழ்வுகள் போட்டிகளில் இடம்பிடித்திருந்தன.

மூன்றாம் தரத்திலிருந்து உயர்தரம் வரையுள்ள சுமார் 150 மாணவர்கள் போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றியிருந்ததாக ஏறாவூர் கோட்ட உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.சி. உஸனார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, மத்தி கல்வி வலயத்தின் ஏறாவூர்க் கோட்ட உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.சி. உஸனார், மட்டக்களப்பு கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் எம்.எல். அப்துல் வாஜித், ஓய்வு பெற்ற ஆசிரியர் என்.எல். அஜ்வத் உட்பட இன்னும் பல அதிகாரிகள் போட்டி நடுவர்களாகக் கடமையாற்றியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X