2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

வருடாந்த மாநாடு

Kogilavani   / 2015 ஜூன் 04 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 8 ஆவது வருடாந்த மாநாடும் பொதுக் கூட்டமும் எதிர்வரும் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாளிகைக்காடு பிஸ்மில்லா விடுதியில் நடைபெறவுள்ளதாக அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் யூ.எல்.எம்.பைஸர் புதன்கிழமை(3) தெரிவித்தார்.

இந்நிகழ்வில், தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் செயலாளர் எ.அப்துல் மஜீட், கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் வி.விவகானந்தலிங்கம், பிரதி அஞ்சல் மா அதிபர் கே.கனகசுந்தரம், அக்கரைப்பற்று அம்பாறை பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் ஆர்.எம்.ரூபசுந்தரபண்டா உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது, 2015ஃ2016ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு இடம்பெறுவதோடு, ஓய்வுபெற்ற தபாலதிபர் ஆர்.எம்.நௌஷாட் மற்றும் பிரதம அதிதி செயலாளர் ஏ.அப்துல் மஜீட் ஆகியோர் கௌரவிக்கப்படவுள்ளதாகவும் சங்கத்தின் செயலாளர் யூ.எல்.எம். பைஸர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X