2025 ஜூலை 02, புதன்கிழமை

ஆக்கத்திறன் போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரல்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 04 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சினால் வருடாந்தம் நடத்தப்படும் அரசாங்க  ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டிக்கு ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன.  இந்நிலையில்,  திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட அரச ஊழியர்கள்  தமது விண்ணப்பங்களை திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு அருகாமையிலுள்ள கலாசார மத்திய நிலையத்தில் ஒப்படைக்கமுடியும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க சிறுகதை, பாடல், கவிதை, சிறுவர் ஆக்கம், ஓவியம் போன்ற ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன.

இப்போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் உத்தியோகத்தர்கள் இதற்கான விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலக கலாசார மத்திய நிலையங்களிலோ  அல்லது கலாசார உத்தியோகத்தர்களிடமோ சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .