Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 05 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
எந்த சலுகைக்கோ அல்லது பணத்துக்கோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சோரம் போகாது. வட, கிழக்கு தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை கிடைக்கும்வரைக்கும் கூட்டமைப்பின் பயணம் தொடரும். இதைத் தடுக்க எவராலும் முடியாது என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர்; கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
துறைநீலாவணை சமூக, பொருளாதார, கல்வி அபிவிருத்தி அமையத்தின் வேண்டுகோளுக்கிணங்க பொதுமருத்துவமாது விடுதியின் நுழைவாயில் அழகுபடுத்தவுள்ளது. அதற்காக தனது சொந்த நிதியை கையளிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இந்நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக எமது தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒத்துழைத்துள்ளீர்கள்.
இந்த நல்லாட்சியில் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும்; என்ற நம்பிக்கையில் தமிழ் மக்களும் நாமும் உள்ளோம். இந்த நம்பிக்கை வீண்போகாதவாறு இந்த செயற்படவேண்டும்' என்றார்.
'இது இவ்வாறிருக்க, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்குகளால் வேற்று இனத்தவரின் பிரதிநிதித்துவம் அதிகரிப்பதை தடுக்கவேண்டும். தமிழர்களாகிய நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச் செய்யவேண்டும். அப்போதே நாம் பேரம் பேசும் சக்தியாக நாடாளுமன்றத்தில் இருக்கமுடியும் என்பதுடன், எமது உரிமைப்பயணத்தையும் தொடரமுடியும்' என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago