2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

'ஜனாதிபதி மைத்திரிக்கு நன்றியுடையவர்களாக இருக்கவேண்டும்'

Suganthini Ratnam   / 2015 ஜூன் 05 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

நல்லாட்சியை ஏற்படுத்தி சிறுபான்மை சமூகத்தினர் நிம்மதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுத்த  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ், முஸ்லிம் சமூகங்கள்  என்றென்றும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் என ஜனநாயக தேசிய அமைப்பின் தலைவரும் சுகாதார அமைச்சின் இணைப்பாளருமான சதுற சேனாரத்ன தெரிவித்தார்.

பாலமுனை கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை (4) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் இந்த நாட்டில் இனவாதத்தை பரப்பி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த ஆலயங்கள் தோறும் சென்று மக்கள் அபிமானம் பெறுவதற்கு முயற்சிக்கின்றார்.
நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு எவ்வாறு அரசியல், கட்சி வேறுபாடுகளை மறந்து செயற்பட்டோமோ அவ்வாறே எதிர்வரும் காலங்களிலும் ஒற்றுமையாக செயற்படவேண்டும்.

இன்று நாட்டில் சமாதானம் தோற்றுவிக்கப்பட்டு சகல சமூகங்களும்; ஒற்றுமையாக வாழக்கூடிய நிலை உருவாகியிருக்கின்றது. இதற்கு வழிகோரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனைவரும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X