2025 ஜூலை 02, புதன்கிழமை

'வீடுகளில் மேற்கொள்ளும் விவசாய உற்பத்திகள் ஆரோக்கியமானவை'

Suganthini Ratnam   / 2015 ஜூன் 05 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

விவசாயிகள் தமது வீட்டு சூழலிலிருந்து இலகுவான முறையில் விவசாய உற்பத்திகளை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் உற்பத்தி செலவை  குறைத்து  நஞ்சற்ற ஆரோக்கியமான உணவுகளை பெற்றுக்கொள்ள முடியும் என விவசாயப் போதனாசிரியர் எஸ்.சித்திரன் தெரிவித்தார்.

கோமாரி பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை  (04) நடைபெற்ற அறுவடை விழாவில்  உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.  

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கிழக்கு மாகாண விவசாய திணைக்களமானது  நகர வீட்டுத்தோட்ட செய்கையை  ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. இதன் அடிப்படையில் கோமாரி விவசாய திணைக்கள அலுவலகமானது கோமாரி பிரதேசத்தில் விவசாய உள்ளீடுகளை வழங்கி விவசாயிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.  

விவசாயிகள் தங்களுக்கு தேவையான விவசாய உற்பத்திகளை தமது வீட்டு சூழலிலிருந்து இலகுவான முறையில் உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம் உற்பத்தி செலவை  குறைத்து  நஞ்சற்ற ஆரோக்கியமான உணவுகளை பெற்றுக்கொள்ள முடியும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .