2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

திருக்கோவிலில் செயலமர்வு

Suganthini Ratnam   / 2015 ஜூன் 05 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு
 

இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக அரச உத்தியோகத்தர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று (05) திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்; நடைபெற்றது.

இதில் திருக்கோவில் பிரதேச செலயகத்தில் பணிபுரியும் சமூகசேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் மக்கலோடு கிராம மட்டங்களில் வெளிக்களப் பணிகளில்; பணிபுரியும் அரச உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது நீதிமன்றங்களில் எவ்வாறு குற்றவியல் மற்றும் சிவில் வழக்குகள் பதிவு செய்தல் , எந்தெந்த பிரிவுகளின் ஊடாக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.

இச்செயலமர்வில் திருக்கோவில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன், அக்கரைப்பற்று சட்ட உதவி ஆனைக்கு பொறுப்பதிகாரி எம்.கே.எம்.நசீம், சட்ட ஆலோசகர் எம்.எச்.எம்.றுஸ்டி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X