Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூன் 06 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
முன்னாள் கிழக்கு மாகாண ஜப்பான் கராத்தே சம்மேளனம் மற்றும் இலங்கை சொற்றான் கராத்தே சம்மேளனத்தின் தலைவரான சிகான் கே. இராமச்சந்திரனின் ஓராண்டு நினைவு தினமும் கராத்தே சுற்றுப் போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வும் அக்கரைப்பற்று இராமகிருஸ்ண மகா வித்தியாலத்தில் சனிக்கிழமை (06) நடைபெற்றது.
கிழக்கு மாகாண பிரதம, சிரேஷ;ட போதானாசிரியர்கள் மற்றும் கறுப்புப் பட்டி கராத்தே மாணவர்களினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கிழக்கு மாகாண கராத்தே பிரதான போதனாசிரியர் கே.கேந்திரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர் வீ.ஜெகதீஸன், கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத் தலைவர் சென்சோ கே.சுந்தரலிங்கம், சம்மேளனத்தின் செயலாளர் எம்.பி. செய்னுலாப்தீன் உள்ளிட்ட முக்கயஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது மரணித்த சிகான் கே. இராமச்சந்திரனுக்காக சுடர்விளக்கேற்றி மலர்தூவி பிரார்த்தனையும் மௌன அஞ்சலியும் இடம்பெற்றது.
மேலும் கிழக்கு மாகாணத்தின் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கிடையான கராத்தே போட்டியில் முதலாமிடத்தைப் பெற்ற இராமகிருஸ்ண மகாவித்தியாலய மாணவன் சரோன் சச்சின் மற்றும் 02 இடத்தைப் பெற்ற அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவன் எஸ்.ஏ. சர்ராஜ் முகம்மட் ஆகியோர் உள்ளிட்ட சாதனை மாணவர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
30 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago
2 hours ago