Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூன் 07 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
ஒரு பாடசாலையின் வளர்ச்சியை கல்வியின் மூலமோ, பௌதிக வளம் மூலமோ முன் கொண்டு செல்ல முடியாது. பெற்றோரின் பங்களிப்பு இன்றியமையாததாக காணப்படுவதாக அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம். காசிம், சனிக்கிழமை (06) தெரிவித்தார்.
அதிபர்களான ஏ.எல்.எம். பாயிஸ், ஏ.சீ.எம். ஹாரீஸ் ஆகியோருக்கான சேவை நலன் பாராட்டு விழா அட்டாளைச்சேனை டாக்டர் ஜலால்டீன் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அட்டாளைச்சேனை கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.ஐ.எம். நபீல் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வலயக் கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம். காசிம் தொடர்ந்து உரையாற்றுகையில்,
டாக்டர் ஜலால்டீன் வித்தியாலயம் இப் பிராந்தியத்தில் மிகவும் பழமை வாய்ந்த வித்தியாலயமாக காணப்படுகின்றது.
இப்பாடசாலையில் பௌதீக வளப் பற்றாக்குறை நீண்டகாலமாக காணப்பட்ட போதிலும் கல்விச் செயற்பாடுகள் ஒரு முன்மாதிரியாக செல்வதையிட்டு அதிபர், ஆசிரியர்களை பாராட்டுகின்றேன்.
இங்கு பற்றாக்குறையாக காணப்படுகின்ற கட்டட வசதி மற்றும் தளபாட போன்றவற்றை மிகவிரைவில் நிவர்த்திப்பதற்கான நடவடிக்கை எடுப்பேன். இதற்கு பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகம் என்பன ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்தில், இப்பாடசாலையில் விசேட தேவையுள்ள மாணவர்களும் கல்வி கற்பதால் அவர்களுக்குத் தேவையான வசதிகளும் குறைவாகவும் காணப்படுகின்றன.
இவைகளையும் மிகவிரைவில் நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
இந்நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஐ.எல்.எம். நஸீர், ஐ.எல்.ஏ. மனாப், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எல்.எம். பத்தாஹ் மற்றும் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், அதிபர்களான ஏ.சீ.எம். ஹரீஸ், ஏ.எல்.எம். பாயிஸ் ஆகியோர் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
34 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
2 hours ago