2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

'ஷீயாக்களின் ஊடுருவலை இல்லாதொழிக்க வேண்டும்'

Suganthini Ratnam   / 2015 ஜூன் 07 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் ஷீயாக்களின் ஊடுருவல் அதிகரித்து வருவதாக அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் எஸ்.எச்.ஆதம்பாவா தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா ஏற்பாடு செய்த உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கான விசேட செயலமர்வு நேற்று சனிக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், நாட்டில் தற்போது ஷீயா கொள்கை மிகவும் தீவிரமாக பரப்பப்பட்டு வருகின்றது. எமது பிரதேசங்களிலும் இது வேகமாக பரவி வருகின்றது. இதற்கான முயற்சிகள் பல்வேறு ரூபங்களில் முன்னெடுக்கப்படுகின்றன. இது குறித்து மக்களுக்கு விழிப்பூட்டப்பட வேண்டும்.

பள்ளிவாசல் பொறுப்புதாரிகளும் உலமாக்களும் மார்க்கத்தின் பாதுகாவலர்கள். நாங்கள் இவ்விடயங்களில் மிகக் கவனமாக இருந்து சமூகத்தை வழிநடத்த கடமைப்பட்டிருக்கின்றோம். எனவே, ஷீயா விடயத்தில் இரு தரப்பினரும் இணைந்து எமது சமூகத்தில் அவர்களின் ஊடுருவலை முற்றாக இல்லாதொழிக்க பாடுபட வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X