Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஜூன் 07 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
இலங்கை சிறைச்சாலை ஐக்கியத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பிராந்திய பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட குற்றவாளிகளாகாமல் வாழும் வழிமுறைகளை ஆராயும் விழிப்புணர்வுக் கருத்தரங்கு இன்று (07) கோளாவில் விநாயகர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
அக்கறைப்பற்று பொலிஸ் நிலைய வாகன போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ஐ.கே.கமஹே தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் பாடசாலை மாணவர்கள், சமூகத்தலைவர்கள், கிராம உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
இதன்போது மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் நடைபெறுகின்ற கொலை, கொள்ளை, துஷ்பிரயோகம், சிறுவர் துஷ;பிரயோகம் போன்ற குற்றங்களை தடுப்பது குறித்தும் பிரதேசத்தில் நடைபெறுகின்ற விபத்துகள் சம்மந்தமாகவும் மோட்டார் வாகன சட்ட விதிமுறைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டன.
இதில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீஸன், இலங்கை சிறைச்சாலை ஐக்கியத்தின் தேசிய இயக்குநர் எஸ்.ஜெயராஜ், இலங்கை சிறைச்சாலை ஐக்கியத்தின் மட்டு., அம்பாறை மாவட்ட தலைவர் போதகர் டி.எஸ்.தயாசீலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
32 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago
2 hours ago