Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஜூன் 07 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்தல்லா,எஸ்.கார்த்திகேசு
'வடக்கு, கிழக்கு மக்கள் இணைந்து குறைந்தது 20 ஆசனங்களையாவது பெற்றுக்கொண்டால் மாத்திரமே எமக்கான தீர்வின் அடுத்தகட்ட படிமுறைக்கு செல்லக்கூடியவர்களாக இருப்போம் என்பதை மறந்துவிடக்கூடாது' இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
ஓய்வுபெற்ற வைத்திய கலாநிதி மயில்வாகனம் தேவாராஜாவின் சேவை நலன் பாராட்டு விழா அக்கரைப்பற்று வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் சனிக்கிழமை (6) மாலை இடம்பெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'அம்பறை மாவட்டத்தில் வாழ்ந்துவருகின்ற மூவின சமூகங்களில் தமிழ்ச் சமூகமே மத்தளம் போன்று அடிபடுகின்ற சமூகமாக காணப்படுகின்றது.
எங்களுக்கு வருகின்ற வளப்பங்கீடுகள் திட்டமிட்டு இன்னுமொரு சகோதர இனத்தினால் மாற்றப்படுகின்றது. குறிப்பாக, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்ட 250 மில்லியன் ரூபாய் நிதி அரசியல் செல்வாக்கை பாவித்து மாற்றம் செய்வதற்கான ஒரு நிலை காணப்படுகின்றது. இவ்வாறான பிரச்சினைகள் வருகின்றபோது, மக்கள் எங்களை பார்த்துக் கேள்வி கேட்கின்றார்கள்;.
இந்த அரசாங்கத்தின் நல்லாட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்காளியாக உள்ளது என பலர் நினைக்கின்றனர். ஆனால், இந்த செய்தியை நீங்கள் மறுதலித்துக் கூறவேண்டும். நாங்கள் இந்த அரசாங்கத்தின் முழுமையான பங்காளிக் கட்சியாக இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
சில விடயங்களை மாத்திரமே இந்த அரசாங்கத்துடன் இணைந்து செய்கின்றோம். நல்லாட்சிக்கான கதவு திறக்கப்பட்டுள்ளதே தவிர, இன்னும் நல்லாட்சி மிளிரவில்லை என ஜனாதிபதி கூறிவருகின்றார். எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னரே நல்லாட்சியைக் காணமுடியும்' என்றார்.
37 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
2 hours ago