2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

கிட்டங்கி வாவியில் நீராடியவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 ஜூன் 07 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  சேனைக்குடியிருப்பு கிட்டங்கி வாவியில் தனது நண்பர்களுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை நீராடிக்கொண்டிருந்த  சேனைக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த த.லுக்சாந்த் (வயது –16) என்பவர்  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில்  கல்முனை பொலிஸாருக்கும்; கடற்படையினருக்கும் தகவல் வழங்கிய நிலையில், ஒலுவில் கடற்படை முகாம் சுழியோடிகள் சடலத்தை மீட்டுள்ளனர்.  

இவர் கல்முனை இராமகிருஸ்னமிசன் கலவன் பாடசாலையில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்கிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பில்  கல்முனை பொலிஸார் விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X