Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூன் 13 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஸ்.எம். ஹனீபா
சிறந்த அறிவுத் திறனுடைய மாணவர்களாக மிளிர்வதற்கு போசாக்கு நிறைந்த உணவுகளை நாளாந்தம் உண்ண வேண்டும் என அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். ஏ.எல். அலாவுதீன் தெரிவித்தார்.
தேசிய உணவு போசாக்கு மாதத்தினை முன்னிட்டு அட்டாளைச்சேனை அல்- அர்ஹம் வித்தியாலயத்தில் போசாக்கு உணவு தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.ரீ. ரவூப் தலைமையில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
நாட்டில் ஒரு ஆரோக்கியமான சமூதாயத்தை உருவாக்குவதற்கு அரசாங்கம் கூடுதலான நிதியை ஒதுக்கீடு செய்து பல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளது. இதனை மாணவர்களாகிய நீங்கள் பின்பற்றி அதன் மூலம் நாட்டில் ஆரோக்கியமான சமூகம் உருவாகுவதற்கு செயற்பட வேண்டும்.
நாம் எப்போதும் எமக்குத் தேவையான உணவு வகைகளை உண்பதற்கு பழகிக் கொள்ள வேண்டும்.
கேடான உணவுகளை உண்பதன் மூலம் நாம் சிறந்த சுகதேகிகளாக வாழ முடியாத நிலைக்கு தள்ளப்படுவதோடு மற்றவர்களுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்த கூடியவர்களாக மாறிவிடுவோம். பாடசாலைகளில் கற்பிக்கப்படுகின்ற பாடங்களையும் சரியான முறையில் கிரகிக்க முடியாமல் போய்விடும்.
எனவே, உணவகங்களில் தயாரிக்கப்பட்ட உணவுகளை உண்ணாமல் எமது வீட்டுத் தோட்டத்தில் காணப்படும் போசாக்கான உணவுகளை காலை உணவாக வழங்க வேண்டும.; அப்போது தான் நாம் பாடசாலையில் ஆரோக்கியமான பிள்ளையாக செயற்படுவோம்;.
நாட்டில் சிறந்த சமூதாயத்தை உருவாக்குவதற்கு நாம் எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் எம்.ஏ. அன்சார், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல். ஹாசிம் உட்பட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
9 minute ago
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
58 minute ago
2 hours ago