Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூன் 13 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எஸ்.எம்.முஜாஹித்
நாவிதன்வெளி பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி பிரிவும் உலக தரிசன நிறுவனமும் இணைந்து சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி ஏற்பாடு செய்த விழிப்புணர்வு ஊர்வலமும் துண்டுப்பிரசுர விநியோகம் மற்றும் கருத்தரங்கும் நிகழ்வும் இன்று சனிக்கிழமை (13) மத்தியமுகாம் நகரில் இடம்பெற்றது.
கடந்தகால யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நாவிதன்வெளி பிரதேச சிறுவர்கள், வறுமை காரணமாக பாடசாலைக் கல்வியில் நாட்டம் குறைவடைந்து தொழிலுக்கு செல்லும் நிலை அதிகரித்து வருவதை தடுத்து நிறுத்தும் நோக்குடனேயே இவ்விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஜே.மயூரன் தெரிவித்தார்.
நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரனின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில், சிறுவர் நன்னடத்தை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.துரைராஜ், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.கஸ்பியா வீவி, மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஜெனிதா பிரதீபன், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஜே.மயூரன், உளவளத்துணை உதவியாளர் ரி.தயாளினி, மத்தியமுகாம் நகரிலுள்ள வர்த்தக நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள், மகளிர் அபிவிருத்தி மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
8 minute ago
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
57 minute ago
2 hours ago