Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூன் 14 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்டNVQ தராதாரமுள்ள குழாய் பொருத்துனர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப்பட்டறை, துறைசார்ந்த வளவாளர்களினால் அம்பாறை நகர மண்டபத்தில் சனிக்கிழமை (13) இடம்பெற்றது.
இலங்கையில் தகுதி பெற்ற குழாய் பொருத்துனர்களின் பற்றாக்குறையை கருத்திற் கொண்டு, நிலையானதொரு நீர் வழங்கல் முறைமையை உருவாக்குவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் நாடு பூராகவூம் குழாய் பொருத்துனர்களுக்கான பயிற்சி நெறிகளை நடாத்திவருகிறது.
அத்துடன், அவர்களை பதிவு செய்யும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒர் அங்கமாகவே மேற்படி பயிற்சிப்பட்டறை நடாத்தப்பட்டது.
இதன் ஆரம்ப நிகழ்வில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் கிழக்கு பிராந்திய சேவைகள் மத்திய நிலையத்தின் பிரதம பொறியியலாளர் எம்.கே.முசாஜித் கலந்து கொண்டு இப்பயிற்சி நெறியின் முக்கியத்துவம் தொடர்பாக கருத்துரை வழங்கினார்.
திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 35NVQ தராதாரமுள்ள குழாய் பொருத்துனர்கள் இப்பயிற்சி நெறியில் கலந்து கொண்டனர்.
இதன்போது இறுதியில் எழுத்து மூலமான ஒரு பரீட்சையும் அம்பாறை ஹாடி தொழில் நுட்ப கல்லுரியில் செய்முறை பயிற்சியும் இடம் பெற்றது.
13 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
2 hours ago