2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

இன ஒற்றுமையை வளர்ப்பதற்கான மையமாக தென்கிழக்குப் பல்கலைக்கழகம் விளங்குகின்றது

Sudharshini   / 2015 ஜூன் 15 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் கல்வித்துiறையில் அபார வளர்ச்;சிகண்டு வருவது மட்டுமல்லாமல் இன ஒற்றுமையை வளர்ப்பதற்கான ஒரு மையமாகவும் செயற்பட்டு வருகின்றது என உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்துக்கான விடுதி மற்றும் சிற்றுண்டிச்சாலைக்கான அடிக்கல் நாட்டும் விழா சனிக்கிழமை(13) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

இப்பல்கலைக்கழகம் 1,200 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது மூவாயிரம் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இதனை எதிர்வரும் 2020ஆம் ஆண்டளவில் 8,000மாக உயர்த்துவதற்கான இலக்கில் செயற்பட்டு வருகின்றோம்.

மேலும், இப்பல்கலைக்கழகத்தில் மிகக் குறுகிய காலத்தினுள் பொறியியல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறைகள் துரித வளர்ச்சிகண்டு வருகின்றன.

தேசிய ரீதியில் பல்கலைக்கழகங்களுக்கிடையான தரப்படுத்தலில் 16ஆவது இடத்திலிருந்த இப்பல்கலைக்கழகம், தற்போது 8ஆவது இடத்துக்கு  முன்னேற்றம் கண்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X